ÓÕ¸¡ ºÃ½õ !

¸ó¾÷Ã󾡾¢       Audio

கந்தரந்தாதி நூலில் காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த அந்தாதிப் பாடல்கள். எளிதில் பொருள் விளங்கிக்கொள்ள முடியாத பாடல்கள்; புலமை விளையாட்டுப் பாடல்கள்.

எனவே ”கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே” என்னும் பழமொழி ஒன்று தோன்றியது. திருக்கழுக்குன்றத்து மலை ஏறுவதற்குக் கடினமானது. அதுபோல கந்தரந்தாதி புரிந்துகொள்ளக் கடினமானது.

ஒரு பாடல் முடிவிலஉள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம் அந்தாதி எனப்படும்.

அதாவது.....

ஒரு செய்யுளின் முடிவுப்பகுதி அடுத்து வரும் செய்யுளின் முதல் பகுதியாக வருமாறு அமைத்துப் பாடுதல்

அந்தாதிப் பகுதியில் உள்ள 100 பாடல்களும் ”சி, சீ, செ, சே, தீ, தெ, தே” என்னும் 8 எழுத்துக்களில் ஒன்றைக் கொண்டு தொடங்குகின்றன.

திருஞானசம்பந்தர்
தேவாரத்தில் தலப்பெயருடன் கூடிய மோனையந்தாதி உள்ளது.

இந்த நூலிலுள்ள மோனை எழுத்துக்களும் செந்தில் வாழ் முருகனைக் குறிப்பனவாக இருப்பதால் இந்த நூல் திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பட்டது என்னும் கருத்து நிலவிவருகிறது.

கந்தர் அந்தாதி பற்றிய குறிப்புகள் மற்ற சில நூல்களிலும் வருவதை, திருப்புகழ் உரை ஆசிரியர் டாக்டர் வ.சு.செங்கல்வராய பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்.

கந்தர் அந்தாதிப் பாடல்கள் அனைத்துமே, சி,சீ,செ,சே,த,தீ,தெ,தே எனும் எட்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டு துவங்குகின்றன. 27 பாடல்களில் திருச்செந்தூரைப் பற்றிய குறிப்புகள் வருவதால், செந்தூரில் இது பாடப்பட்டிருக்கலாம் என்பதும், திருவண்ணாமலைக் கோவிலிலுள்ள யானை திறை கொண்ட விநாயகரையும், உண்ணாமுலை அம்மையையும் காப்புச் செய்யுட்களில் துதித்துள்ளபடியால் இது ஒரு வேளை திருவண்ணாமலையில் பாடப்பட்டிருக்கலாம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

 

 

அருட்கவி அருணகிரிநாதர். ஒருமுறை மஹாபாரதத்திற்குத் தமது அற்புத வாக்கால் உரை எழுதிய வில்லிபுத்தூராரைச் சந்திக்க நேர்ந்தது. பெரும் புலவரான வில்லிபுத்தூராரைக் கண்டு புலவர் சமூகமே நடுங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. காரணம் அவர், தன்னுடன் வாது செய்து தோற்ற புலவர்களின் காதுகளைக் குறடு கொண்டு தோண்டும் வழக்கத்தைக் கையாண்டு வந்தார். அவரது செருக்கை அடக்க திருவுளம் கொண்ட முருகன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்த முடிவு செய்தான்.அருணகிரியாரை, வில்லிபுத்தூராருடன் கவிதைப் போட்டியில் மோதவைப்பதென்றும், தோற்றவர் காதை, மற்றவர் அறுத்துவிடலாம் எனவும் முடிவாயிற்று.

அருணகிரிநாதர், போட்டிக்காகப் பாடவேண்டி இருந்ததால், கடினமான தமிழ் நடையைக் கொண்ட 'கந்தர் அந்தாதி' எனும் நூலை இயற்றத் துவங்கினார்.வில்லிபுத்தூராரும் உடனுக்குடன் உரை கூறலானார்.

53 செய்யுட்கள் இவ்வாறு நிறைவுற்றபின் மேலும் எப்படிப் பாடினால் அவரை மடக்கலாம் என்று அருணகிரியார் முருகனை எண்ணித் துதித்து நின்ற போது, 'த'கர வர்க்க எழுத்துக்களை மட்டுமே வைத்து அடுத்த செய்யுளைப் பாடுமாறு முருகன் எடுத்துக் கொடுத்தான்.அந்தச் செய்யுள் பின்வருமாறு:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

உயிர் போகும் காலத்தில், முருகன் அடியினை பெறும் கருணையைத் தரக்கேட்டு அருணகிரியார் பாடிய மேற்குறிப்பிட்ட 54ஆம் பாடலுக்கு உரை கூற முடியாது தவித்தார் வில்லிபுத்தூரார்! தம் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டதும், அருணை முநிவர் தாமே அப்பாடலுக்கு உரை செய்தார்.அத்துடன் மொத்தம் நூறு பாடல்களைப் பாடி நூலை நிறைவு செய்தார்.ஆனால் வில்லிபுத்தூராரின் காதை அறுக்க ஒப்புக்கொள்ளவில்லை நம் கருணை முநிவர். '.இனியும் இது போன்ற இழிவுச் செயல்களில் ஈடுபடக்கூடாது.' என்று அறிவுரை கூறியதோடு அவர் கையிலிருந்த குறடாவைப் பிடுங்கி வீசி எறிந்தார் என்பது வரலாறு.

இதைப்பற்றிய சில மேற்கோள்கள்....

அக்கிளிதான்- வில்லிபுத்தூரான் செவியின் மேலரிவாள் பூட்டியன்று வல்லபத்தின் வாது வென்று வந்ததுகாண்"

-தணிகை உலா

"எதிரும் புலவன் வில்லி தொழ எந்தை உனக்கந்தாதி சொல்லி ஏழைப்புலவர் செவிக் குருத்தோடெறியுங் கருவி பறித்தெறிந்தே"

-திருமலைமுருகன்

பிள்ளைத்தமிழ் அருணகிரியாரின் கருணைத் திறத்தை எண்ணியே 'கருணைக்கு அருணகிரி' என்று கூறும் வழக்கும் எழுந்தது என்கிறார் டாக்டர் பிள்ளையவர்கள்.

ஒரு தென்னைமரத்திலிருந்து பறித்தெடுத்த தேங்காயுள்ளிருக்கும் சுவைமிக்க இளநீரைப் பருகுவதற்காக நாம் மேற்கொள்ளும் சிரமங்கள் எத்தனையோ; அதேபோலத்தான் கடினமான கந்தர் அந்தாதி பதப்பிரிவு கண்டு அயர்ந்துவிடக் கூடாது.அதன் ஆழம் வரைச் சென்று, பொருட்செறிவை அனுபவித்து உணர்ந்து, பிறர்க்கு கற்பித்து வந்த திருப்புகழ் அடிமை திரு. சு.நடராஜன் போன்ற ஆன்றோரின் உதவியுடன் நாமும் பொருளுணர்ந்து கற்று கந்தர் அந்தாதியை மனனம் செய்வோமேயானால் ஒரு அருட்கவிதையைக் கற்ற நிறைவு நமக்குக் கிட்டும் என்பதில் ஐயமேதுமில்லை.


Ò¨¸ô À¼í¸¨Ç ¸¡ñ¸......